எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள்
எதிர்நீச்சல்
பார்கவியை பத்திரமாக திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்கிற முயற்சியில், ஜீவனந்தத்திற்கு குண்டடி பட்டிவிட்டது. ஆனால், அதற்குள் ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருவரும் இறந்துவிட்டதாக புலிகேசி பேட்டி கொடுத்துவிட்டார்.
இந்த மகிழ்ச்சியில் ஆதி குணசேகரனுடன் இருந்த அனைவரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தனர். இந்த நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜீவானந்தம் தற்போது நல்லபடியாக குணமாகிவிட்டார்.
கொலை செய்ய வரும் அடியாட்கள்
அவரை பார்க்க அங்கு ஜனனி சென்றிருந்த நிலையில், தங்கள் குடும்பத்திற்காக ஜீவானந்தம் இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என கண்ணீர்விட்டு அழுகிறார் ஜனனி. இந்த நேரத்தில், ஜீவானந்தம், பார்கவி உயிருடன்தான் இருக்கிறார்கள் என்கிற விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரிய வருகிறது. அவர்களுடன் ஜனனியும் இருக்கிறார் என்பதையும் குணசேகரனுக்கு அவருடைய அடியாள் தெரியப்படுத்துகிறார்.
இதனால், ஜீவானந்தத்தையும் பார்கவியையும் கொலை செய்ய மீண்டும் அடியாட்களை அனுப்புகிறார் குணசேகரன். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.