AK64 உறுதி செய்த முன்னணி இயக்குனர்.. இது கேங்ஸ்டர் படம் இல்லை! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாக இருக்கிறது. அஜித் தற்போது தனது கார் ரேஸ் கெரியரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார், அதனால் அவர் படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை.
ரேஸிங் சீசன் முடிந்து இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் அடுத்த படத்தை தொடங்குவார் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
மீண்டும் ஆதிக்
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான AK64 படத்தை இயக்குவதை உறுதி செய்து இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது.
படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்த ஆதிக், படத்தில் இருக்கும் மற்ற பிரபலங்கள் பற்றிய தகவல் அப்போது தெரிவிக்கப்படும் என கூறி இருக்கிறார்.
மேலும் இது கேங்ஸ்டர் படம் இல்லை என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
