சுமார் ரு. 400 கோடி செலவில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ஆதிபுருஷ்.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், சீதா கதாபாத்திரத்தில் கிர்த்தி சனோன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ந்நிலையில், ரு. 400 கோடி பட்ஜெட்டிலும், மிகப்பெரிய எதிர்பார்ப்பிலும் உருவாகி வரும் இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி நடந்து வருகிறது.
ஒரு மாதம் நடைபெற உள்ள இப்படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி உள்ளிட்ட சில முக்கிய காட்சிகள் படமாக உள்ளதாம்.
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.