ஆதிபுருஷ் எதிராக கிளம்பிய சர்ச்சை! டீசரில் இந்த காட்சி தான் காரணம்
பிரபாஸின் ஆதிபுருஷ் படம் டீஸர் வெளியான பிறகு பல சர்ச்சைகள் வெடித்து இருக்கிறது.
ஆதிபுருஷ்
ஹிந்தியில் தன்ஹாஜி என்ற படத்தை இயக்கிய ஓம் ராவத் தற்போது இயக்கிவரும் படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக க்ரித்தி சனோன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
நேற்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதை பார்த்து கடும் அதிருப்தியான நெட்டிசன்கள் படத்தை மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். VFX கார்ட்டூன் சேனலை விட மோசமாக இருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்தனர்.
அது பற்றி பதில் கொடுத்த இயக்குனர் ஓம் ராவத், 'படத்தை 3டியில் தியேட்டரில் பாருங்க. இது தியேட்டருக்காக உருவாக்கப்பட்டது. செல்போன் ஸ்கிரீனுக்காக அல்ல என தெரிவித்து இருக்கிறார். மேலும் எனக்கு வாய்ப்பு இருந்திருந்தால் youtubeல் டீஸர் வெளியிடாமல் இருந்திருப்பேன் எனவும் கூறி இருக்கிறார்.

வெடித்த சர்ச்சை
ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக இஸ்லாமியரான சைப் அலி கான் நடித்து இருக்கிறார். படத்தில் ராவணன் கதாபாத்திரம் உண்மையான ராவணன் போல இல்லாமல் இஸ்லாமியர் போல நீண்ட அடர்ந்த தாடி, மற்றும் முடி உடன் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும் அனுமன் கதாபாத்திரம் லெதர் பொருட்கள் அணிந்து இருப்பது போலவும் காட்டப்பட்டு இருக்கிறது. அதற்கு மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதை மாற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்து இருக்கிறார்.

In #Adipursh Hindu Gods Hanuman ji look is like Mughals.#BanAdipurush Brahmin. Sita #BoycottAdipurush #RaOne#BoycottbollywoodCompletely Telugu #Prabhas Hinduism
— Prabhas ?? (@nobuddy772100) October 4, 2022
Notice This ?
1. No mustache ☑️
2. Hanu (chin not like a Human) ☑️
Unlike in the #Adipurush ? pic.twitter.com/JkCCP3R14C
இயக்குனராகும் விஜய் மகன் சஞ்சய்! முதல் பட ஹீரோ விஜய் இல்லை.. யார் தெரியுமா?