அப்பா ஷங்கருடன் போட்டி, மகள் அதிதி கொடுத்த ட்விஸ்ட் .. என்ன தெரியுமா
ஷங்கர்
பொங்கல் பண்டிகை அன்று ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியாவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், இந்த பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படம் பொங்கல் அன்று வெளிவராது என்ற அறிவிப்பு வெளியானது.
இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது, விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி போனதை தொடர்ந்து, பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது.
அந்த வகையில், வணங்கான், ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர், ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகை அன்று வெளிவர உள்ளது.
போட்டி
தற்போது இந்த வரிசையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ள நேசிப்பாயா படமும் இணைந்துள்ளது. இதனால், தன் அப்பாவும், இயக்குனருமான ஷங்கருடன் பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் அதிதி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.