பலருடன் உறவில் இருந்து இருக்கிறேன், அந்த மாதிரியான டார்ச்சர் கொடுத்தாங்க..கேப்டன் மில்லர் பட நடிகை வேதனை
அதிதி பாலன்
கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான அருவி படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அதிதி பாலன். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
டார்ச்சர்..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதி பாலன், " பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். பக்கத்து ஸ்கூல் பையனை காதலித்தேன் அவருடன் பிரேக் ஆகிவிட்டது".
"அதன் பின்னர் நான் பல பேருடன் உறவில் இருந்தேன். இது பற்றி பொய் சொல்ல முடியாது. என் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரியும். சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்து உள்ளனர். நானுமே டார்ச்சர் செய்ததன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம்".
"இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு மோசமான கமெண்ட்டுகள் வரும் நான் கண்டுக் கொள்ள மாட்டேன். ஆனால், அதையெல்லாம் என் அப்பா பார்த்து படித்துவிட்டு ரிப்ளை செய்வார்" என்று அதிதி பாலன் கூறியுள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
