நடிகர் சித்தார்த் எப்படிப்பட்டவர் தெரியுமா.. இதனால் தான் திருமணம் செய்தேன்: அதிதி ராவ்
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது அதிதி ராவ் அளித்த பேட்டியில் தனது கணவரை பற்றி பேசி இருக்கிறார். "அவரை திருமணம் செய்துகொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அவர் அப்படிப்பட்ட ஒரு மனிதர்."
அவர் செயற்கையாக இல்லை
"ஒரு நல்ல மனிதர். அவரிடம் செயற்கையாக எதுவும் இல்லை. நீங்கள் பார்ப்பது போல தான் அவர். மேலும் அவர் மிகவும் அன்பானவர்."
"எனக்கு நெருக்கமானவர் என ஒருவரை பற்றி தெரிந்தால், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வரவைத்துவிடுவார். அப்படிதான் நான் வளர்ந்தேன், அது எனக்கு நிஜமாகவே பிடிக்கும்" என கூறி இருக்கிறார்.
வறட்சி
மேலும் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்தது பற்றி பேசிய அவர், "ஹீராமண்டி படத்திற்கு கிடைத்த பாராட்டுகளை பார்த்தபோது அடுத்து எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என தோன்றியது."
"ஆனால் அதன்பின் வாய்ப்பே வரவில்லை. என்ன நடக்கிறது. எனக்கு வறட்சியில் இருப்பது போல இருந்தது." "அந்த நேரத்தில் தான் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, திருமணத்தை முடித்துவிட்டு அதன் பின் நடிக்கலாம் என போய்விட்டேன்" என அதிதி கூறி இருக்கிறார்.