அதிதி ராவ் பெயரில் வாட்சப்பில் மோசடி.. நடிகைக்கு அதிர்ச்சி சம்பவம்
நடிகை அதிதி ராவ் காற்று வெளியிடை படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய சில படங்களிலும் அவர் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தார்.
நடிகர் சித்தார்த்தை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் அவர். தற்போது அதிதி கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லை.

மோசடி செய்யும் நபர்
இந்நிலையில் அதிதி ராவ் தனது பெயரை பயன்படுத்தி வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசுவதாக தனக்கு தெரியவந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
தனது டீம் மூலமாக தான் அனைத்தையும் செய்வதாகும், பர்சனல் நம்பரை இதற்காக பயன்படுத்துவது இல்லை எனவும் அதிதி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அது நான் இல்லை, அந்த நம்பரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என அதிதி இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
