நடிகை அதிதி ராவ் ராஜ குடும்பத்தை சேர்ந்தவரா? சித்தார்த்தை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகையின் முழு பின்னணி

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
காற்று வெளியிடை படம் மூலமாக தமிழில் பிரபலம் ஆனவர் அதிதி ராவ். அவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். அவர் நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருப்பதாக சமீப காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அதை உறுதியாக அறிவித்தனர்.
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணமும் நடக்க இருக்கிறது. அதிதி ஏற்கனவே 2007ல் சத்யதீப் மிஸ்ரா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்ட நிலையில் பின்னர் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
ராஜ குடும்பத்தை சேர்ந்த அதிதி
நடிகை அதிதி ராவ் நடிகை என்பதை தாண்டி ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
அதிதியின் தாத்தா (அப்பாவின் அப்பா) இந்திய விடுதலைக்கு முன் ஹைதராபாத் மாநிலத்தின் பிரதமராக இருந்த சர் முஹம்மது அக்பர் நாசர் அலி ஹைதாரி தான்.
அதிதியின் இன்னொரு தாத்தா (அம்மாவின் அப்பா) Wanaparthy சமஸ்தானத்தின் ராஜா ஜே. ராமேஸ்வர் ராவ். அதிதியின் ராஜ குடும்பத்துக்கு சித்தார்த் மருமகனாக செல்ல போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.