தளபதி விஜய் குறித்து பேசிய அதிதி ஷங்கர்.. என்ன சொன்னார் தெரியுமா
அதிதி ஷங்கர்
கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார் அதிதி ஷங்கர்.
இப்படம் அறிமுக நடிகை அதிதி ஷங்கருக்கு மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
விருமன் படத்தின் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியுள்ளது.
விஜய் குறித்து பேசிய அதிதி
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
இதில் ' விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும். அதுவும் அவருடன் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் ' என்று கூறியுள்ளார் அதிதி.
விஜய் குறித்து அதிதி பேசியுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
