ஷங்கர் மகளுக்கு இந்த நடிகர் மீது தான் க்ரஷ்! அவரே சொன்னது
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது கோலிவுட்டில் நடிகையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் தற்போது கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
மருத்துவ படிப்பை முடித்த அதிதி அதன் பிறகு நடிகையாக தனது திறமையை காட்ட சினிமாவில் நுழைந்திருக்கிறார். இதுவரை விருமன் படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருக்கிறது.
விருமன் மூலமாக தனக்கு ஒரு பெரிய பிரேக் கிடைக்கும் என காத்திருக்கிறார் அவர். இந்நிலையில் தற்போது அதிதி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் அவரது கிரஷ் யார் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில் தான் பலருக்கும் ஆச்சர்யம். தமிழ் நடிகர்கள் யார் பெயரையும் கூறவில்லை. கன்னட நடிகர் யாஷ் தான் என கூறி உள்ளார் அவர்.

