அக்கா திருமணத்தில் பாலிவுட் நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. வீடியோ இதோ
ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் நேற்று நடைபெற்றது. தருண் கார்த்திகேயன் என்பவரை கரம்பிடித்தார் ஐஸ்வர்யா.
பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதிதி ஷங்கர் குத்தாட்டம்
இந்த நிலையில், திருமண கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீ, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த கொண்டாட்டத்தின் போது, நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு அதிதி ஷங்கர், அட்லீ, ரன்வீர் சிங் மற்றும் ஷங்கரின் இளைய மகன் அர்ஜித் ஷங்கர் அனைவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Ranveer , Atlee , Aditi Shankar Grooving For #AppadiPodu ? pic.twitter.com/nmq25mPL1w
— Vijay Fans Trends ? (@VijayFansTrends) April 16, 2024

24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
