தெலுங்கு சினிமாவிற்குள் நுழையும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்..இயக்குனர் யார் தெரியுமா
அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். பின், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் என்ட்ரி
இந்த நிலையில், அதிதி ஷங்கரின் கவனம் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பி உள்ளது. அதன்படி அவர் விஜய் கனகமெடலா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதிதிக்கு தெலுங்கு மொழி சரளமாக பேசத் தெரியும் என்பதால் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
