வில்லன் நடிகருக்கு ஜோடியான ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. யார் தெரியுமா! புதிய படம்
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஆவார்.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய படம்
இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கரின் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தில் கைதி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் அறிமுக இயக்குனரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கவுள்ளார்.
இதோ பட பூஜையின் புகைப்படங்கள்..

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
