ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. முன்னணி நடிகருடன் இணைகிறாரா
அதிதி ஷங்கர்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து மாவீரன் படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

புதிய படம்
இப்படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அதிதி ஷங்கர் அடுத்ததாக சூர்யாவுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து பேசப்பட்ட நிலையில், தற்போது ஏறக்குறைய இந்த தகவல் உறுதியாகிவிட்டது என்கின்றனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புறநானூறு திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கிறார்கள். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கங்குவா படத்தை முடித்த கையோடு 10 நாட்கள் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் சூர்யா. அந்த 10 நாட்கள் வாடிவாசல் படப்பிடிப்பு முடிந்தபின், சுதா கொங்கரா படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan