ஷங்கர் மகள் அதிதி ஷங்கருடன் கைகோர்க்கும் ராட்சச நடிகர்.. முதல் முறையாக இணையும் ஜோடி
இளம் நடிகை அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர் தற்போது பிசியாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு தரப்பில் இருந்து வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் அதிதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆனால், இப்படத்தில் அதிதி கமிட்டாகியுள்ளது குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்திலும் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அதிதி ஷங்கரின் மற்றொரு புதிய படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ராட்சச நடிகருடன் அதிதி
அதன்படி, பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் கொரோனா குமார். இப்படத்திற்கான அறிவிப்பு கூட வெளிவந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. சிம்பு நடிக்கவிருந்த நிலையில், அதிதி ஷங்கர் தான் கொரோனா குமார் படத்தில் கதாநாயகி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.
தற்போது சிம்பு வெளியேறியுள்ள நிலையில், சிம்புவிற்கு பதிலாக நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு, ராட்சசன் போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த விஷ்ணு விஷால் மற்றும் அதிதி ஷங்கர் ஜோடியில் கொரோனா குமார் திரைப்படம் உருவாகப்போவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
