சீரியல் நடிகைக்கு மாமியார் வீட்டில் கொடுமை.. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

By Karthick Raja Aug 03, 2026 03:30 AM GMT
Report

அதிதி ஷர்மா

பிரபல சீரியல் நடிகை அதிதி ஷர்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகைக்கு மாமியார் வீட்டில் கொடுமை.. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு | Aditi Sharma Files Complaint Against Her Husband

மும்பையை சேர்ந்த பிரபல இந்தி டிவி நடிகை அதிதி ஷர்மா. இவருக்கு வயது 29. 'கலீரின்' சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் 'யே ஜாது ஹை ஜின் கா', 'ரப் சே ஹை துவா' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

புகார் 

கடந்த 2024-ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் கோரேகாவ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நடிகை அதிதி ஷர்மா மும்பை கோரே காவி போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

சீரியல் நடிகைக்கு மாமியார் வீட்டில் கொடுமை.. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு | Aditi Sharma Files Complaint Against Her Husband

அந்த புகாரில் அவர் கூறியுள்ளது, "திருமணம் முடித்த சில நாட்களிலேயே எனது கணவர் என்னுடைய ஆடை விஷயத்தில் தேவையில்லாமல் குறை கூற தொடங்கினார். சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் என்னுடன் பெரிய அளவில் சண்டை போட்டு வந்தார். கடந்த ஆண்டு முதல் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு, என்னை தவறான வார்த்தைகளால் திட்டினார். அதன்பின், என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்".

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம்

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம்

"இதனால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, எனது கணவரின் பெற்றோர் என்னுடைய நகைகள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டனர். என்னை அவர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி, துன்புறுத்தினார்கள்" என அதில் தெரிவித்துள்ளார்.

சீரியல் நடிகைக்கு மாமியார் வீட்டில் கொடுமை.. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு | Aditi Sharma Files Complaint Against Her Husband

அதிதி ஷர்மாவின் புகாரின் அடிப்படையில் போலீசார், அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US