வேட்டையன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே கண்டிப்பாக அப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
கடைசியாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்த ஜெயிலர் படமும் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத வசூல் சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அட்வான்ஸ் புக்கிங்
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகிற 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் வேட்டையன் படம் இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.