வெளிவந்தது விஜய்யின் பீஸ்ட் பட முதல் நாள் வசூல் விவரம்- எங்கு, எவ்வளவு தெரியுமா?
விஜய்யின் பீஸ்ட் பற்றிய பேச்சு தான் தமிழ் மக்களிடம் அதிகம். படம் பிரம்மாண்டமாக இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிவிட்டது.
முதல் நாள் என்பதால் படத்திற்கான விமர்சனங்கள், கொண்டாட்டங்கள் எல்லாம் பெரிய அளவில் உள்ளன. படத்தின் டிக்கெட் புக்கிங் பற்றி செல்லவே தேவையில்லை, பெரிய அளவில் புக்கிங் செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை முன்பதிவில் மட்டுமே எல்லா இடங்களையும் சேர்த்து தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கு மேல் வந்திருக்கும் என்றே கூறலாம்.
USAவில் ப்ரீமியர் ஷோ பக்காவாக நடந்து முடிந்துள்ளது, இதுவரை 293 லொகேஷன்களை வைத்து பார்க்கையில் படம் $606k டாலர் வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதேபோல் கேரளாவில் முன்பதிவில் மட்டுமே படம் ரூ. 4 கோடி வரை வசூலித்துள்ளது என்கின்றனர்.