வலிமைக்கு கிளம்பிய எதிர்ப்பு: தடை கேட்டு போலீசில் புகார்!
அஜித்தின் வலிமை படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா துறையில் அதிகம் பேசப்படுகிறது. படம் ஐந்து நாட்களில் 150 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் விமர்சனங்கள் என கலவையாக வந்தாலும் தற்போது வசூல் தமிழ்நாட்டில் நன்றாகவே வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என சொல்லி தற்போது வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த வழக்கறிஞர் சாந்தி என்பவர் வலிமை படத்தை தான் குடும்பத்துடன் பார்த்ததாகவும், அதில் முதல் காட்சியிலேயே வக்கீல்களை குற்றவாளிகள் போல சித்தரித்து இருக்கின்றனர்.
சமூகத்தில் பொறுப்பான பணியை செய்து வரும் வழக்கறிஞர்கள் பற்றி இப்படி காட்டுவதும், ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டி இருப்பதால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.