கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்?
கரூர் சம்பவம்
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக பிரச்சாரம் நடந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது மிகப்பெரிய துயரத்தையும், அதிர்ச்சியையும் நமக்கு கொடுத்துள்ளது. இந்த சம்பவம் நடந்த அன்று இரவு கரூர் மக்களை சந்திக்க விஜய் அனுமதி கேட்டதாகவும், காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து சென்னை திரும்பிவிட்டார் விஜய்.
வெளியே வந்த விஜய்
சனிக்கிழமை இரவு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு விஜய் வந்தடைந்தார். அதன்பின் பல பிரச்சனைகள் எழுந்த நிலையில், தற்போது 34 மணி நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

பாதுகாவலர்களுடன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து தனது பட்டினப்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri