9 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணையும் பிரபலங்கள் சிம்பு-நயன்தாரா.. ஆனால்?
சிம்பு-நயன்தாரா
சினிமா பிரபலங்கள் காதலிப்பது, பிரிவது, திருமணம் செய்வது, விவாகரத்து பெறுவது என வழக்கமாக செய்து வருகிறார்கள்.
நாமும் அன்றாடம் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை செய்திகளில் படித்து வருகிறோம். அப்படி பிரபலங்களில் ஹிட்டான காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா.
இவர்கள் வல்லவன் படத்தில் நடித்தபோது தீவிரமாக காதலிக்க தொடங்கினர், பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்தார்கள். இவர்கள் பிரிவுக்கு பிறகு 2016ம் ஆண்டு இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.
ஒரே மேடை
தற்போது இவர்கள் இருவரும் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைய உள்ளார்கள். எப்படி என்றால் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க டிராகன் திரைப்படம் தயாராகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கம இந்த படத்தில் கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற 21ம் தேதி டிராகன் படம் வெளியாகவுள்ள நிலையில் நாளை படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிம்பு மற்றும் நயன்தாரா கலந்துகொள்கின்றனர். அதாவது இவர்கள் 9 வருடங்களுக்கு பிறகு ஒரே பிரேமில் வரப்போகிறார்கள்.
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)