அயலி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் வரப்போகும் புதிய சீரியல்.. அட இவர்தான் வில்லியா?
அயலி சீரியல்
என்னா வேகம் அட இருங்கப்பா இப்பவே கண்ண கட்டுவே என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு தொடர்ந்து எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களை அதிகம் களமிறக்கி வருகிறார்கள்.
அப்படி சன் டிவியில் புதியதாக வினோதினி என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. ஜீ தமிழில் விரைவில் அயலி என்ற சீரியல் தொடங்க உள்ளது.
அடுத்த தொடர்
தேஜஸ்வினி கௌடா நாயகியாக நடிக்கும் இந்த தொடர் பரபரப்பின் உச்சமாக இருக்கும் என தெரிகிறது.
அதாவது வீட்டில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் அயலி வெளியே அதர்மத்தை கண்டால் காளி போல பொங்கி எழுகிறார்.
புரொமோவை கண்டே ரசிகர்கள் மிரண்டு போய்யுள்ளனர். இந்த நிலையில் ஜீ தமிழில், தமிழ் என்ற பெயரில் ஒரு தொடர் வர உள்ளதாம்.
ஜெய் ஸ்ரீனிவாச குமார் நாயகனாக நடிக்கும் இந்த தொடரின் நாயகி யார் என தெரியவில்லை.
ஆனால் வில்லியாக நடிகை சக்தி கமிட்டடாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
