பிக்பாஸ் 8 பிறகு வெளியாகும் விஷாலின் முதல் Project... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள், புகைப்படத்துடன் இதோ
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஜனவரி 2025ல் தான் முடிவடைந்தது. பெரிய பரிசுத் தொகையுடன், லட்சக் கணக்கான மக்களின் மனதை வென்று பிக்பாஸ் 8வது சீசன் டைட்டிலை வென்றார் முத்துக்குமரன்.
நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் ஒன்றாக ரயான் நடித்த புதிய படத்தை பார்த்துள்ளனர்.
தற்போது இன்னொரு போட்டியாளர் நாயகனாக நடித்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
புதிய பாடல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் விஷால்.
அந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறி பிக்பாஸ் 8ல் கலந்துகொண்டவர் சூப்பராக விளையாடி பைனலிஸ்டில் ஒருவராக இருந்தார்.
தற்போது இவர் நடித்துள்ள Haiyoo Saachale பாடலின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, அதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.