விவாகரத்துக்கு ரெடியான விஜய் பட நடிகை.. தனுஷ், சமந்தாவை தொடர்ந்து இவருமா
சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக வந்த இரு செய்திகள், தனுஷ் - ஐஸ்வர்யா மற்றும் சமந்தா நாகசைதன்யாவின் விவாகரத்து செய்து தான்.
இதில் இரு ஜோடிகளும் மீண்டும் இணைவார்கள் என்றும் சில தரப்பில் இருந்த கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சமந்தா மற்றும் தனுஷை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தவறான படங்கள் எடுக்கிறார் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கையில் இந்த விவகாரம் மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது.
ஏனென்றால், இந்த விவகாரம் காரணமாக நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளாராம். நடிகை ஷில்பா ஷெட்டியின் சமீபத்திய நடவடிக்கை தான், இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஆம், ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளாராம்.
அதுமட்மின்றி தனது கணவரின் பெயரில் இருந்து பண்ணை வீட்டை தனது பெயருக்கு மாற்றியுள்ளாராம் ஷில்பா ஷெட்டி.
இதனால், பாலிவுட் திரை வட்டாரத்தில் இருவரும் இன்னும் கொஞ்சம் நாட்களில் பிரியவுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.