விவாகரத்துக்கு பின் ஒரே வீட்டிற்கு வந்துபோகும் தனுஷ் - ஐஸ்வர்யா.. காரணம் என்ன
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் தனி தனியாக அவரவர் பாதையில் பயணிக்கப்போவதாக தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேளையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்துக்கு பின் ஒரே வீட்டிற்கு வந்துபோகும் தனுஷ் - ஐஸ்வர்யா
அதன்படி, விவாகரத்து அறிவித்தபின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம். ஆம், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.

அந்த வீட்டிற்கு தான், தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri