படுதோல்வியடைந்த வாரிசு நடிகர் அகிலின் ஏஜென்ட் திரைப்படம்.. தோல்விக்கு பின் செய்த விஷயம்
அகில் அக்கினேனி
அகில் அக்கினேனி தெலுங்கு திரைத்துறையில் பிரபலங்களான நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் ஆவார். இவர் முதன் முதலில் 2014ம் ஆண்டு வெளிவந்த "மனம்" எனும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இதன்பின் பின் 2015ம் ஆண்டு வெளிவந்த "அகில்" எனும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அது பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது. அப்படத்தை தொடர்ந்து இரண்டு வருடம் கழித்து "ஹலோ" எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் டீசண்ட் ஹிட் ஆனது.
கடந்த ஏப்ரல் 29, 2023 அன்று "ஏஜென்ட்" திரைப்படம் வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பில் பல கோடி செலவில் திரைக்கு வந்த இப்படம் மோசமான வரவேற்பை பெற்றது. படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்கரா படத்தின் வணிகரீதியான தோல்வியினை தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு பின் எழுதிய கடிதம்
மேலும் இப்படத்தின் தோல்விக்கு காரணம் சரியான ஸ்கிரிப்ட் இல்லாமல் தொடங்கப்பட்டதே என தெரிவித்தார். இதுவரை மௌனம் காத்து வந்த ஹீரோ அகில் பல விமர்சனங்களை அடுத்து தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அகில் கூறியதாவது :
" 'ஏஜென்ட்' " படத்தில் வேலை செய்த அனைவருக்கும் என்னுடைய நன்றி, படத்தில் எங்களின் சிறப்பான வேலைப்பாடுகள் இருந்தாலும் எதிர்பாராத வகையில் படம் தோல்வி அடைந்துள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த என்னோட தயாரிப்பாளரான அனில் காருவிற்கு நன்றி ".

" நான் வேலை செய்வதற்கு ரசிகர்களான உங்களுடைய அன்பும், ஆதரவும் தான் காரணம்". நிச்சயம், தான் திரும்பி வருவதாகவும் தன்மீது அன்பு கொண்டுள்ள அணைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்