மாநாடு படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரின் படத்தில் வில்லனான SJ சூர்யா!
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் மாநாடு.
இப்படத்தில் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகர் SJ சூர்யா, தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் வந்து மாநாடு படத்தில் மிரட்டியிருந்தார்.
இதனிடையே அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் SJ சூர்யா, மீண்டும் முக்கிய நடிகரின் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், நடிகர் விஷால் அடுத்து இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் SJ சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மாநாடு படத்தில் வில்லனாக மிரட்டியிருந்த SJ சூர்யாவை மீண்டும் வில்லனாக பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri