படையப்பாவை தொடர்ந்து ரஜினியின் இன்னொரு படம் ரீரிலீஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சமீபத்தில் ரஜினியின் படையப்பா படம் டிசம்பர் 12ம் தேதி ரீரிலீஸ் ஆகி இருந்தது. 25 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் அந்த படத்தை தியேட்டரில் கொண்டாடினார்கள்.
நல்ல வசூலும் படையப்பா படத்திற்கு ரீரிலீஸில் கிடைத்தது. அந்த படத்தின் கதையே என்னுடையது தான், என் நண்பன் பெயரில் நானே தயாரித்தேன் என ரஜினி பெரிய உண்மையையும் போட்டுடைத்து இருந்தார்.

மூன்று முகம்
படையப்பா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது ரஜினியின் மேலும் ஒரு படம் ரீரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வந்திருக்கிறது.
ரஜினியின் மூன்று முகம் படம் தான் அது. SP அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என மூன்று விதமான ரோல்களில் நடித்து மிரட்டி இருப்பார் ரஜினி.
மூன்று முகம் ரீரிலீஸ் பற்றிய அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
