பிரபாஸ் நடிப்பில் பாகுபலி பாணியில் உருவாகவிற்கும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பாகுபலி படத்தின் வெற்றிக்குப்பின் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமகாகி விட்டார் நடிகர் பிரபாஸ்.
இவர் நடிப்பில் தற்போது ‘சலார்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சலார் படத்திற்கு பின் பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதன் கதைக்களம் வரலாற்று பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இப்படத்தை பாகுபலி போல் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் பிரஷாந்த்.
பிரபாஸின் 25வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிற்காக.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
