சமந்தா, விஜய் சேதுபதியை தொடர்ந்து அந்த விஷயத்தில் களமிறங்கும் ஜோதிகா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகை ஜோதிகா
திருமணத்திற்கு பின் 26 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, அதன்பின் தொடர்ந்து பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது. அடுத்ததாக மலையாளத்தில் காதல் தி கோர் எனும் திரைப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
புதிய வெப் சீரிஸ்
இந்நிலையில், நடிகை ஜோதிகா புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். ஹிந்தியில் உருவாகும் இந்த வெப் சீரிஸை சோனாலி போஸ் இயக்குகிறார்.
தாபா கார்டல் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் 5 குடும்ப பெண்களை மையாக வைத்து உருவாகிறது. ஏற்கனவே சமந்தா தி பேமிலி மேன் 2 ஹிந்தி வெப் சீரிஸிலும், விஜய்சேதுபதி ஃபர்சி எனும் ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்கள்.
அவர்களை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
