அட்லீக்கு அடித்த ஜாக்பாட்! ஷாருக் கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் பாருங்க
அட்லீ
இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் மும்பை மட்டுமின்றி சென்னையிலும் ஒரு மாதம் நடைபெற்றது. சென்னையில் விஜய்யை சந்தித்தது, அவர் தனக்கு சமைத்து கொடுத்தது மறக்க முடியாத ஒன்று என ஷாருக் கூறி இருந்தார்.
சென்னையில் ஷூட்டிங் நடத்த ஒப்புக்கொண்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார் என அட்லீயும் நன்றி கூறி இருந்தார்.
அடுத்து சல்மான் கான்
ஷாருக் கான் படத்தை முடித்தபிறகு அட்லீ இன்னொரு பாலிவுட் டாப் ஹீரோ உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஹிந்தியில் அட்லீயின் முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவருடன் பணியாற்ற சல்மான் கான் விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம். அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதனால் அட்லீ கூடிய விரைவில் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் ஆகும் வாய்ப்பும் இருக்கிறது.
பிகில் நடிகை வர்ஷா பொல்லம்மா தயாரிப்பாளர் மகனுடன் காதல் திருமணம்?

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
