தொடையில் 16 தையல், செம வலி, நிற்கவே முடியாது- தற்போதைய நிலையை பற்றி கூறிய தொகுப்பாளினி அர்ச்சனா
தொகுப்பாளின அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய்யில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார்.
கடைசியாக Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், ஆனால் இடையில் உடலில் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சிக்கு அவர் தொடர்ந்து வருவது இல்லை.
மூளைக்கு பக்கத்தில் அவருக்கு பிரச்சனை இருக்க அண்மையில் தான் சர்ஜரி நடந்தது, இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
தனது யூடியூப் பக்கத்தில் அர்ச்சனா, Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்கு எப்போது வருவீர்கள் என நிறைய பேர் கேட்கிறார்கள்.
தொடையில் 16 தையல் போடப்பட்டுள்ளது, செம வலி இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வருவது பிரச்சனை இல்லை, ஆனால் 15ல் 16 மணி நேரம் நிற்க வேண்டும்.
தையல் போட்டுள்ளதால் வலி இருக்கிறது நிற்க முடியாது. வரும் செப்டம்பர் 3ம் தேதி ஒரு பரிசோதனை உள்ளது, அதன்பிறகே அனைத்தும் தெரியவரும் என கூறியுள்ளார்.