வலிமை படத்தை போலவே பீஸ்ட் படத்திலும் இந்த விஷயம் இருக்கு.. அப்போது படம் சூப்பர்ஹிட் தான்
சமீபத்தில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை.
அஜித்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக முறையில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
வலிமை படத்தில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பீஸ்ட் படத்திலும் குடும்ப ரசிகர்களை கவர்வதற்கு, தங்கச்சி செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் படத்தில் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில், மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கச்சி செண்டிமெண்ட் காட்சிகள் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்பதினால், ரசிகர்கள் தற்போது அந்த காட்சிகளை காண ஆவலுடன் காத்துருக்கிறார்கள்.