படுதோல்வியடைந்த விஜய்யின் வாரிசு.. பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடும் இயக்குனர் வம்சி
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் விஜய் கூட்டணி அமைத்த திரைப்படம் வாரிசு. குடும்ப கதைக்களத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார்.
இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படம், அவர்களுடைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
வசூல் ரீதியாகவும் வாரிசு திரைப்படம் பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்ற நிலையில், படுதோல்வியை சந்தித்தது வாரிசு.
திண்டாடும் இயக்குனர் வம்சி
இந்த நிலையில், வாரிசு படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி, இப்படத்திற்கு பின் இதுவரை எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது.
வாரிசு படத்தின் தோல்வி தான், இயக்குனர் வம்சியின் தற்போதைய நிலைக்கு காரணம் என பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
