ரஜினியின் வேட்டையன் படத்திற்கு பிறகு TJ ஞானவேல் இயக்கும் முன்னணி நடிகர்... யார் தெரியுமா?
டிஜே ஞானவேல்
தமிழ் சினிமாவில் இருக்கும் சில இயக்குனர்கள் வருடம் ஆனாலும் பரவாயில்லை என தரமான கதைகளாக இயக்கி வருவார்கள்.
அப்படி நாகர்ஜுனாவை வைத்து பயணம் என்ற கதையை இயக்கி கவனம் பெற்றவர் தான் டிஜே ஞானவேல்.
அதன்பின் பிரகாஷ் ராஜை வைத்து தோனி, அசோக் செல்வனை வைத்து கூட்டத்தில் ஒருத்தன், சூர்யாவை வைத்து ஜெய் பீம் என கதைகள் பேசும் படங்களை இயக்கி கவனம் பெற்றார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் ரஜினியின் வேட்டையன் படம் வெளியானது, பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படத்திற்கு சரியான விமர்சனம் கிடைக்கவில்லை, எனவே வசூலிலும் பெரிய அளவு கலெக்ஷன் இல்லை.
அடுத்த ஹீரோ
தற்போது டிஜே ஞானவேல் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டதாக தெரிகிறது. அவர் தற்போது பிரபல மலையாள சினிமா நடிகரிடம் கதை கூறியிருப்பதாகவும் விரைவில் கூட்டணி அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவர் வேறுயாரும் இல்லை நடிப்புக்கு பெயர் போன மோகன்லால் தான். மோகன்லாலுக்கு கதை பிடித்திருப்பதாக தெரிகிறது, ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.