மீண்டும் அதே இயக்குனருடன் இணையும் நடிகர் சிவகார்த்திகேயன்.. அப்போ சூப்பர் தான்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாக்டர்.
திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகுமா என்று..
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri