மீண்டும் கைவிடப்பட்ட முக்கிய நடிகரின் படத்தை கையில் எடுக்கும் பீஸ்ட் இயக்குனர் !
தமிழ் திரையுலகில் தற்போதுள்ள இயக்குனர்களில் குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர் என்றால் அது நெல்சன் திலீப்குமார்.
இவர் இயக்கத்தில் இதுவரை வெளியாகியுள்ள மூன்று திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் நெல்சன் முதன்முதலில் இயக்கி வந்த திரைப்படம் வேட்டைமன்னன், சிம்புவை வைத்து அவர் இயக்கி வந்த அப்படம் பாதியிலே கைவிடப்பட்டது.
இதனிடையே அப்படம் கைவிடப்படத்திற்கான காரணம் குறித்து அப்பட தயாரிப்பாளர் நிக்ஸ் ஆர்ட் சக்கரவர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது "நானா எடுத்துக்கிட்ட பிரேக்தான் இது. நெல்சனின் முதல் படம் வேட்டை மன்னன் பாதியிலேயே நிக்குது. குடும்பத்தில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்ததால தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தேன்.
வேட்டை மன்னன் திரைப்படமே மீண்டும் தொடங்க வாய்ப்பிருக்கு. வேட்டை மன்னனின் இரண்டாவது பாகம் முழுவதுமே ஜப்பானில் எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அந்த 2, 3 மாதங்களில் சிம்பு வாலு திரைப்படத்தை முடிக்க திட்டமிட்டார்.
வேட்டை மன்னன் திரைப்படம் கொஞ்சம் அதிகமான பட்ஜெட் , அதனால சிம்பு பட்ஜெட்க்கு உதவியாக இருக்கும்னு என்னை வாலு படத்தை தயாரிக்க சொன்னார். பண்ணோம். வாலு ரிலீஸ் தள்ளிப்போச்சு! அதுக்கு சிம்பு நிறைய உதவியாக இருந்தாரு.
அந்த படத்துக்கு பிறகு எனக்கு பிரீத்திங் டைம் தேவைப்பட்டது. அதனால படத்தை எடுக்க முடியல. நெல்சன் அதுக்குள்ளால வேற புராஜெக்ட் வருது பண்ணவானு கேட்டாரு. தாராளமா பண்ணுங்க. எப்போ தேவையோ அப்போ கூப்பிடுறேன்னு சொன்னேன்" என தெரிவித்துள்ளார்.