பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மொதும் அஜித்.. இந்த முறை வெற்றி யார் பக்கம்

By Kathick Jun 27, 2022 02:40 PM GMT
Report

விஜய் - அஜித்

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நட்சத்திரங்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். இவ்விருவரின் படங்கள் தனித்தனியாக வெளிவந்தாலே அன்று திருவிழா போல் தான் இருக்கும். ஆனால், இவ்விருவரின் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வந்தால், சொல்லவா வேண்டும்.

கடைசியாக விஜய் நடிப்பில் உருவான ஜில்லா மற்றும் அஜித் நடிப்பில் உருவான வீரம் ஆகிய இரு திரைப்படங்கள் ஒரே நாளில் ஒன்றாக வெளிவந்தது. இதில் அஜித்தின் வீரம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் ஜில்லா சற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், இதன்பின் தற்போது மீண்டும் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மொதும் அஜித்.. இந்த முறை வெற்றி யார் பக்கம் | Again Vijay And Ajith Movie Going Clash For Pongal

அதன்படி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அதே நாளில் அஜித் நடித்து வரும் AK 61 திரைப்படமும் வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே AK 61 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், அப்போது வெளியாக சாத்தியமில்லை, என்று டிசம்பர் மாதம் தள்ளிப்போவதாக தெரிவித்திருந்தனர்.

ஒரே நாளில் வெளியாகும் படங்கள்

இந்நிலையில், தற்போது அந்த தேதியும் இல்லாமல், AK 61 அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம், அஜித்தின் AK 61 மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தெரியவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இதில் வெற்றிபெறப்போவது யார் என்று..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US