ஏஜென்ட் கண்ணாயிரம் திரைவிமர்சனம்
சந்தானம் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். நகைச்சுவை கதாநாயகனாக நடித்து மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் சந்தானம், முதல் முறையாக சீரியசான ஏஜென்ட் ரோலில் நடித்துள்ளது இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. கன்னடத்தில் வெளிவந்த ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் என்பதினாலும் இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக ஏஜென்ட் கண்ணாயிரம் பூர்த்தி செய்தாரா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
ஜமீன்தார் குரு சோமசுந்தரத்திற்கும் - இந்துமதிக்கும் பிறக்கும் குழந்தை தான் சந்தானம் {கண்ணாயிரம்}. இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், சிறு வயதில் இருந்து சந்தானமும், அவரது தாயும் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். ஜமீந்தாரின் முதல் மனைவியும் அவரது மகன்களும் இவர்களை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
சிறு வயதில் இருந்தே, துப்பறிவதில் சிறந்து விளங்கும் சந்தானம், இளம் வாலிபர் ஆனபின் ஏஜென்ட் ஆகுகிறார். சிட்டியில் ஏஜெண்டாக வேலை பார்த்து வரும் சந்தானத்திற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாக வந்து சேர்க்கிறது அவருடைய அம்மாவின் மரண செய்தி.
இதனால் உடனடியாக ஊர்க்கு கிளம்புகிறார். ஆனால், சந்தானம் ஊர்க்கு சென்றடைவதற்குள் அவருடைய அம்மாவின் இறுதி சடங்கை முடித்து விடுகிறார்கள். தனது தாயின் முகத்தை கடைசியாக பார்க்க முடியவில்லை என்று ஒவ்வொரு நாளும் ஏங்கி தவிக்கிறார் சந்தானம்.
இப்படியொரு நிலையில் சந்தானத்தின் துப்பறியும் திறமைக்கு சவால்விடும் வகையில் கொலை கேஸ் ஒன்று அவர் கைக்கு வருகிறது. அதை கேஸை கையில் எடுத்து துப்பறியும் சந்தனத்தை திசைதிருப்பி விட எதிரிகளும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எதிரியின் வலையில் சிக்கும் சந்தானம், அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லை அதிலேயே மாட்டிக்கொண்டாரா? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
ஏஜென்ட் கண்ணாயிரமாக நடித்துள்ள சந்தானம் நடிப்பில் சிறந்து விளங்கினாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார். கதாநாயகியாக வரும் ரியாவின் நடிப்பு ஓகே. படத்தில் எதற்காக புகழ் வருகிறார் என்று தெரியவில்லை.
சந்தானத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி மற்றும் அப்பாவாக நடித்துள்ள குரு சமோசுந்தரம் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். முனீஸ்காந்த், ரெண்டின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா உள்ளிட்டோரின் நடிப்பு ஓகே.
மனோஜ் பீதாவின் இயக்கம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. திரைக்கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சம். சுவாரஸ்யம் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த படமாக ஏஜென்ட் கண்ணாயிரம் அமையவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பெரிதாக ஒர்கவுட் ஆகவில்லை.
பின்னணி இசை படத்திற்கு பலம். தேனி ஈஸ்வர், சரவணனின் ஒளிப்பதிவில் குறையில்லை. அஜய்யின் எடிட்ங் ஓரளவு ஓகே.
பிளஸ் பாயிண்ட்
சந்தானம் நடிப்பு
பின்னணி இசை
மைனஸ் பாயிண்ட்
விறுவிறுப்பில்லா திரைக்கதை, இயக்கம்
ஏஜென்ட் கதைக்கான சுவாரஸ்யம் இல்லை