அகத்தியா திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் தேடல் குறித்த பல பேண்டசி கதைகள் வந்துள்ளது, இதில் இந்த வாரம் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள அகத்தியா எந்த அளவிற்கு மக்களை கவர்ந்தது? பார்ப்போம்.
கதைக்களம்
ஜீவா சினிமாவில் ஆர்ட் டைரக்ட்டராக இருக்க, அவரின் முதல் படமே ட்ராப் ஆகிறது. அவர் கஷ்டப்பட்ட போட்ட செட் அப்படியே வீணாக, ராஷி கண்ணா ஜீவாவிடம் ஒரு ஸ்கேரி ஹவுஸாக இதை மாற்றலாம் என ஐடியா தருகிறார்.
அதனால் ஸ்கேரி ஹவுஸாக அதை மாற்றி வியாபாரம் பார்க்க, அங்கு பல அமானுஷிய விஷயங்கள் நடக்கிறது. அப்போது ஜீவாவிற்கு ஒரு பழைய ரீல் கிடைக்க, அதில் அர்ஜுன் ஒரு சித்த மருத்துவராக வருகிறார்.
அர்ஜுன் 1940-ல் சித்த மருத்துவராக வந்து அப்போதுள்ள ஒரு கொடூரமான ப்ரன்ச் ராஜாவின் தங்கையை குணப்படுத்துகிறார், அதோடு எலும்பு கேன்சர்க்கான மருந்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
அதோடு அந்த கதை முடிய ஜீவாவின் அம்மாவுக்கு இந்த நோய் இருகிறது, ஜீவா எப்படியாவது 1940-ல் என்ன நடந்தது என்பதை அறிய வேண்டும் என நினைக்கிறார்.
அதோடு அந்த கேன்சர் மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதா, அப்படியிருந்தால் அதை எடுத்து நம் அம்மாவை குணப்படுத்த வேண்டும் என நினைக்க, இதற்கு ஒரு பேய் தடையாக வர, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜீவா நீண்ட வருடம் கழித்து ஒரு ப்ளாக் மூலம் ஹிட் கொடுக்க, மீண்டும் ஒரு புதிய முயற்சியாக பேண்டஸி கதையில் களம் கண்டுள்ளார். அவர் தன் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே செய்துள்ளார்.
அதே நேரத்தில் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் வழக்கம் போல் தன் அலட்டல் இல்லாத நடிப்பை நிறைவாக செய்துள்ளார். வில்லனாக வரும் எட்வர்ட் கவனம் ஈர்க்கிறார், ராதாரவியும் வெள்ளைக்காரர்கள் கைக்கூலியாக எல்லோரையும் வெறுப்பேற்றும் நக்கல் பேச்சில் ரசிக்க வைத்துள்ளார்.
மேலும், 1940 மற்றும் தற்போது நடக்கும் கதை என மாறி மாறி வருகிறது, இதற்கு ஒரு காரணியாக வழக்கம் போல் பேய் பங்களா வந்து செல்கிறது. ஆனால், அர்ஜுன் எடுத்த வீடியோ எதோ நேரிலேயே பார்த்தது போல் ஜீவாவிற்கு தெரிவதெல்லாம் லாஜிக் ஓட்டை என்றாலும் வேற எதுவும் செய்ய முடியாது நமக்கும் காட்டியாக வேண்டும் அல்லவா.
1940 காட்சிகளில் பாரதிதாசன், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், முரசொலி போன்ற ரெபரன்ஸ் ரசிக்க வைக்கின்றது. அதே நேரத்தில் மகதீரா கதை போல் அந்த காலம், இந்த காலம் என்று கதை நகர்ந்தாலும் எழுந்து உட்கார வைக்கும் அளவிற்கு எந்த ஒரு சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லை.
அதிலும் இந்த மாதிரி பேய் படங்கள் என்றாலே காமெடி காட்சிகள் ஒர்க் ஆக வேண்டும், ஆனால், இது அவர்கள் காமெடி என்று சொன்னாலும் நமக்கு சிரிப்பு வரவில்லை. டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு சூப்பராகவே உள்ளது, அதிலுன் 1940 காட்சிகள் மிக சிறப்பு, யுவன் இசை பெரிதும் கவரவில்லை.
கிளைமேக்ஸில் இருந்த பிரமாண்டம் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருக்கலாம், ஆனால் அதுவும் மார்வல் படமான டாக்டர் ஸ்ட்ரேன்ச்-ல் பார்த்தது போலவே இருந்தது.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம்
1940 காட்சிகள் முக்கியமாக அர்ஜுன் நடிப்பு.
முதல் பாதி
பல்ப்ஸ்
பல பேய் படங்களில் பார்த்து பழகி போன காட்சிகள்.
இது ஹாரர் படமா இல்லை பேண்டஸி படமா எதை நோக்கி நாம் போவது என்ற குழப்பம் உள்ளது.
மொத்தத்தில் அகத்தியா சுவாரஸ்யத்தின் உச்சமாக இருக்க வேண்டிய கதைக்களம் சுமாராக வந்துள்ளது.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
