அகிலன் திரைவிமர்சனம்
ஜெயம் ரவி - என். கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பூலோகம். இப்படத்திற்கு பின் இந்த கூட்டணி அகிலன் திரைப்படத்தில் இணைந்துள்ளது. இதனாலேயே இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருந்தது.
அரசியல் பேசும் படம் என்பதினாலும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளிவந்துள்ள நிலையில், எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
இந்திய பெருங்கடல் வழியாக அனைத்து சட்டவிரோதமான செயல்களையும் செய்து வருகிறார் கபூர். இவருக்கு கீழ் வேலை செய்யும் பரந்தாமன் தமிழ்நாட்டின் வழியாக சட்டவிரோதமான செயல்களை செய்து வருகிறார்.
இவருடைய அடியாட்களில் திறமையானவர் தான் கதாநாயகன் அகிலன். பரந்தாமனுக்காக பல கொலை, கொள்ளை, கடத்தல் என பல விஷயங்களை அகிலன் செய்துள்ளார். துறைமுகத்தில் வேலை பார்த்துக்கொண்டே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் அகிலன் எப்படியாவது கபூரை பார்க்க வேண்டும் என்று பல விதமான விஷயங்களை செய்து வருகிறார்.
இதன்முலம் கபூரை பார்க்கும் அகிலனுக்கு அவர் மூலம் மிகப்பெரிய ரிஸ்க்கான தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை செய்து முடிப்பவர் யாரோ, அவர் தான் இந்திய பெருங்கடலின் ராஜா என கபூர் அறிவிக்கிறார்.
இந்த காரியத்தை கையில் எடுக்கும் அகிலன் கச்சிதமாக அதை செய்து முடிக்கிறார்? இதனால் பகையையும், பல எதிரிகளையும் சம்பாதிக்கிறார் அகிலன். இதன்பின் என்ன நடந்தது? எதற்காக அகிலன் இதையெல்லாம் செய்கிறார்? அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் ஜெயம் ரவி நடிப்பு படத்திற்கு பலம். வழக்கம் போல் இல்லாமல் இப்படத்தில் நெகேட்டிவ் ரோலில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அதற்கு பாராட்டு. கதாநாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கரின் நடிப்பு ஓகே. தான்யா ரவிச்சந்திரனுக்கு பெரிதும் ஸ்கோப் இல்லை.
ஹரிஷ் பேராடி, சிராக் ஜானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்கள். முக்கிய வில்லனாக வரும் நடிகர் தருண் கதாபாத்திரத்திற்கு தேவையான வில்லத்தனத்தை திரையில் காட்டவில்லை.
கல்யாண கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு பாராட்டு. ஆனால், அதை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்று தான் கூறவேண்டும். சுவாரஸ்யமில்லா திரைக்கதை. இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது.
2 மணிநேரம் 14 நிமிட படம் என்றாலும், இரண்டாம் பாதியில் பல இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. அதை கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். உலக அரசியல் மற்றும் பசி குறித்து பேசிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு தனி பாராட்டுக்கள். அதுமட்டுமின்றி இயக்குனர் ஜனநாதனுக்கு சமர்ப்பணமாக இப்படத்தை கொடுத்துள்ளார்.
மேலும் 'வியாபாரிகளுக்கு ஏழையின் பசி தெரியாது' என்ற கருத்தை முன் வைத்துள்ளார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். அதுவும் இப்படத்தின் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. சாம் சி.எஸ் பாடல்கள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் ஆக்ஷன் மிரட்டல், எடிட்ங் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
ஜெயம் ரவி நடிப்பு
கதைக்களம், வசனம்
பசி குறித்து பேசிய கருத்து
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதை
இரண்டாம் பாதியில் பல இடங்களில் தொய்வு