நடிகை சனா கானுக்கு லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி! பல நாட்கள் தவிக்கவிட்ட பிரச்சனை
சனா கான்
சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சனா கான். அவர் 2020ல் சையத் அனாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து அவர் விலகி தான் இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துக்கொள்வதில் தான் தற்போது அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஏர்போர்டில் தவிப்பு
தற்போது சனா கான் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனுக்கு சென்று இருக்கிறார். அவர்கள் அங்கு போன பிறகு தான் அவர்களது லக்கேஜ் அனைத்தும் வந்து சேராதது தெரியவந்திருக்கிறது.
பைகள் எதுவும் கிடைக்காததால் மாற்று உடை கூட இல்லாமல் தவிப்பதாக சனா கான் கூறி இருக்கிறார். மேலும் நான்கு நாட்களாக குழந்தையின் உடைகள் கூட இல்லாமல் தவிப்பதாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
நடிகைக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu