எலிமினேட் ஆன ஐஷு.. கதறி கதறி அழுத நிக்சன்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐஷு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் நிக்சன் உடன் சேர்ந்து செய்த விஷயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
கமல்ஹாசன் கார்டை எடுத்து காட்டிய அடுத்து நொடியே நிக்சன் தான் கடும் அதிர்ச்சி ஆனார். ஐஷு எல்லோரிடமும் விடைபெற்று கொண்டு எமோஷ்னலாக வீட்டை விட்டு கிளம்பினார்.
கதறி கதறி அழுத நிக்சன்
ஐஷு வெளியேறிய பிறகு நிக்சன் கதறி கதறி அழுதார். ஒரு பெண்ணும் பையனும் பேசினாலே லவ் தானா, இவர்களால் ஐஷு என்னிடம் மூன்று நாட்கள் பேச கூட இல்லை. பயந்து பயந்து தான் பேசினாள்.
ஐஷு ஒரு குழந்தை, இப்படி வெளியில் அனுப்பிடீங்களே என மற்ற போட்டியாளர்களை குறை கூறி கொண்டிருந்தார் நிக்சன்.
ஆனால் தற்போது நெட்டிசன்கள் ட்விட்டரில் நிக்சனை மேலும் தாக்கி ட்ரோல் செய்து வருகின்றனர்.

பப்ஜி காதலால் சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்.., 6 யூடியூப் சேனல் நடத்தி லட்சக்கணக்கில் வருமானம் News Lankasri
