விவாகரத்துக்கு பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. பிரபல நடிகை பேட்டி
ஐஸ்வர்யா பாஸ்கரன்
70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "நியாயங்கள் ஜெயிக்கட்டும்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ரிலேஷன்ஷிப்
பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், திருமணம் வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "என் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதில் எனக்கு வருத்தம் இல்லை".
"அதே போல நானும் விவாகரத்து செய்த பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதுவும் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன், அருண் விஜய் நடிப்பில் வெளியான "யானை" என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri