நடிகர் பிரபுவின் சின்ன வீடா போக ரெடி.. அவர் மனைவிக்கும் இது தெரியும்.. பிரபல நடிகை பேட்டி
பிரபு
வெள்ளித்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரபு. சிவாஜி கணேசனின் மகனான இவர் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருகிறார்.
தனது தந்தை சிவாஜியை தொடர்ந்து பிரபு நடிக்க வந்த நிலையில், தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில், பிரபல நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா நடிகர் பிரபு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா
இதில் "எனக்கு 16 வயது இருக்கும் போதே நடிகர் பிரபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவ்வளவு அழகாக இருப்பார். அவருடைய சிரிப்பை பார்த்தாலே மயங்கி விடுவேன். அப்போதில் இருந்தே எனக்கு அவர் மீது காதல் இருந்தது. இன்னும் அந்த காதல் ஓயவில்லை".
"நான் பிரபு மீது வைத்துள்ள காதல் பற்றி அவருடைய மனைவி புனிதாவிற்கும் தெரியும். நான் அவருடைய வீட்டின் அருகேயே வந்துவிட்டேன், நீ பெரிய வீடா வெச்சிக்கோ, சின்ன வீடா வெச்சிக்கோ என கிண்டல் செய்தேன்" என கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    