தனுஷ் - ஐஸ்வர்யா மகன்களுடன் இருக்கும் சூப்பர்ஸ்டார்! வைரலாகும் போட்டோ
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் இன்று என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்து மழை பொழிந்தனர். அது மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கூட பலரும் ரஜினிக்கு வாழ்த்து கூறி இருந்தனர்.
ரஜினிக்கு வாழ்த்து சொல்ல எக்கச்சக்கமான ரசிகர்கள் அவரின் போயஸ் கர்டன் வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் அவர் இங்கே இல்லை, யாரும் மழையில் காத்திருக்க வேண்டாம் என ரஜினியின் மனைவி லதா தெரிவித்து இருந்தார்.
பேரன்களுடன் இருக்கும் போட்டோ
ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இருவருமே மாறி மாறி மகன்கள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ரஜினி உடன் தனது மகன்கள் இருவரும் இருக்கும் போட்டோவை ஐஸ்வர்யா இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.