கைது செய்யப்பட்ட கண்ணன்.. பிரசவ வலியில் துடித்த ஐஸ்வர்யா, குழ்நதைக்கு என்ன ஆச்சு
கைதான கண்ணன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லஞ்சம் வாங்கியதாக கூறி கண்ணனை சூழ்ச்சி வலையில் சிக்க வைத்துவிட்டனர். இதனால் போலீஸ் கண்ணனை கைது செய்துவிட்டது. இதை கேள்விப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கதிர் விசாரிக்க சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது கண்ணன் தான் லஞ்சம் வாங்கினான் என போலீஸ் உறுதியாக கூறுகிறார்கள் என கதிர் கூறியவுடன் ஐஸ்வர்யா கண்ணீர்விட்டு கதறி அழும் சமயத்தில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி வந்துவிட்டது.
குழ்நதைக்கு என்ன ஆச்சு
உடனடியாக ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கூறவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு பக்கம் கண்ணன் கைதாகி இருக்க மனமுடைந்துபோயிருக்கம் நிலையில், மறுபக்கம் வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா.. வெளிவந்த புதிய தகவல்