யாராலும் அந்த விஷயத்தை செய்ய முடியாது, ரொம்ப கடினம்.. ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்!!
பார்வதி
தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி. அதை தொடர்ந்து, இவர் மரியான் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பிறகு, மலையாள படங்களான சார்லி, பெங்களூர் டேஸ் போன்ற படங்கள் மூலம் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பதித்தார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் வெளி வந்தன. இந்த படங்களில் தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகை பார்வதி.
ரொம்ப கடினம்!!
இந்த நிலையில், பார்வதியை பாராட்டி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், பார்வதி ஒரு சிறந்த நடிகை என்றும், அவருக்கு இருக்கும் நடிப்பு திறமையை கண்டு பிரமித்து விட்டேன் என்றும், பார்வதி போல் நடிப்பது மிகவும் கடினம் என்றும், நீங்கள் ஒரு தங்கம் என்றும் பாராட்டி உள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
