தவெக வெற்றிபெற வேண்டும் என ஆசையா இருக்கு! பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

By Karthick Raja May 02, 2026 09:50 AM GMT
Report

2026 தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வருகிற மே 4ஆம் தேதி எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தவெக வெற்றிபெற வேண்டும் என ஆசையா இருக்கு! பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக் | Aishwarya Lekshmi Desires Tvk Will Win In Election

இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இம்முறை வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல், இம்முறை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் போட்டியிட்டுள்ளார். இவருடைய வருகையால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என பல மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

விஜய்யின் கட்சிக்கு திரையுலகில் இருந்து சிலர் ஆதரவு தெரிவித்ததை நாம் பார்த்தோம். இந்த நிலையில், பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தவெக வெற்றிபெற வேண்டும் என பேசியுள்ளார்.

தவெக வெற்றிபெற வேண்டும் என ஆசையா இருக்கு! பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக் | Aishwarya Lekshmi Desires Tvk Will Win In Election

இதில் அவர்,"எனக்கு விஜய் அண்ணனை ரொம்ப பிடிக்கும். நான் கேரளாவில் இருக்கிறேன், எனக்கு இங்கு வாக்கு இல்லை என்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அவருக்கு வேறு எந்த தேவையும் இல்லை, இப்போது அரசியலில் வரவேண்டும் என்று. அவருக்கு மக்கள் மீது ஒரு அன்பு இருக்கு, எனக்கு மக்கள் கொடுத்ததை நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் வந்துள்ளார். தவெக வெற்றிபெற வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது. மக்களுக்கும் அதே ஆசையும் தான். ஆனால், நான் அதை பேச கூடாது, மக்கள் தான் பேச வேண்டும்" என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US